earth is expanding,spell checked post
பகுதி ஒன்று பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது. விஞ்ஞானி.க.பொன்முடி. ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதைப்படிவங்களுக்கு புவியியல் மற்றும் உயிரியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயல வில்லை. தற்பொழுது கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசரின் புதை படிவங்களானது, கடல் பகுதியால் சூழப் பட்டு இருக்கும் ஆஸ்திரேலியா,அண்டார்க்டிக்கா ஆகிய தீவுக் கண்டங்களிலும் அதே போன்று மடகாஸ்கர்,கிரீன்லாந்து போன்ற தீவுகளிலும் காணப் படுவதற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் மற்றும் தீவுகளானது ஒன்றாக இணைந்து இருந்ததாகவும் அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு விளக்கம் கூறப் படுகிறது. இதில் குறிப்பாக அண்டார்க்டிகா மற்றும் கிரீன்லாந்து போன்ற நிலப் பகுதிகளானது, டைனோசர்கள் காலத்தில் வெப்பம் அதிகம் இருக்கும் இடத்தில் இருந்ததாகவும் பின்னர் நகர்ந்து துருவப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது. ஆனால் இந்த விளக்கம் முற்றிலும் தவறான விளக்கம் என்பது இணையத்தில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில், நான் மேற்கொண்ட ஆய்வில் தெரிய...