சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தைத் தெரிவிக்க வில்லை.
சுமத்ரா தீவில் ஏற்பட்ட தெற்காசிய சுனாமிக்கு நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை. இதே போன்று ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் USGS என்று அழைகப் படும் அமெரிக்க புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை. இ எ நிலையில் இந்த இரண்டு தீவுகளிலும் ,அந்த தீவுகளுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் அந்த நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தரை மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. தற்பொழுது கண்டங்கள் எல்லாம் அதனைச் சுற்றியுள்ள கடல் தளத்துடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக அறிவியல் உலகில் நம்பப் படுகிறது.இந்தக் கருத்தானது கண்டத் தட்டு நகர்ச்சி என்று அழைக்கப் படுகிறது. அவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது,கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும் அதனால் கடல் தளத்தின் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது. அதே போன்று ஒரு கண்டத்திற்கு அடியில் குறிப்பாக கடலுக்கு அடியில்,அடுத்த கண்டத்தின் கடல் தளம் உரசியபடி நகர்ந்து ச...