பகுதி மூன்று--- தீவுகளுக்கு விலங்கினங்கள் எப்படி சென்றன?
பகுதி மூன்று--- தீவுகளுக்கு விலங்கினங்கள் எப்படி சென்றன? எரிமலைத் தீவுகளுக்கு மண்புழுக்கள் எப்படி சென்றன? லண்டன் விலங்கியல் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் என்ற பேராசிரியர் மண் புழுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட பொழுது, அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றிலும் அமைந்து இருக்கும் பல எரிமலைத் தீவுகளுக்குச் சென்று, அந்தத் தீவுகளில் உலகில் வேறு எங்கும் காண இயலாத பல் அரிய வகை மண் புழு இனவகைகளைக் கண்டு பிடித்தார். அந்த மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோ ஸ்காலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள் என்று வகை படுத்தி உள்ளார். மண் புழுக்கள் தோலின் மூலம் சுவாசிக்கும் உயிரினம். காற்றில் உள்ள பிராண வாயு மண் புழுவின் தோலின் வழியாக சென்று மண் புழுவின் இரத்தத்தில் கலக்கும்.அதே போன்று மண் புழுவின் உடலில் இருந்து கரிய மில வாயு தோலின் வழியாக வெளியேறும். இதற்கு மண் புழுவின் தோல் எப்பொழுதும் ஈரப் பசையுடன் இருக்க வேண்டும். எனவேதான் மண் புழுக்கள் அதிக காற்றுள்ள இடத்தையும் வெய்யிலையும் தவிர்த்து விடுகின்றன.மலைக் காலத்திலும் இரவிலுமே மண் புழுக்கள் தரைக்கு மேல...