பூமியின் சுருக்கமான வரலாறு- -விஞ்ஞானி.க.பொன்முடி.
பூமியின் சுருக்கமான வரலாறு- -விஞ்ஞானி.க.பொன்முடி. A Brief history of the Earth. Scientist.G.Ponmudi. 3276 words,28086 Characters,109 paragraph,13 pages. தெற்காசிய சுனாமிக்கும்,ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்களும் , கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில் புவியியல் மற்றும் உயிரியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயல வில்லை. கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதியில் அமைந்து இருக்கும் ஸ்வால் பார்ட் தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய கள்ளி தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அதே போன்று, இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடற் கரைப் பகுதியில் வாழ்ந்த, முதலை போன்ற மூன்று அடி நீளமுள்ள,கடல் பகுதியைக் கடக்க இயலாத மெஸோ சாரஸ் என்று அழைக்கப் படும், ஊர்வன வகை விலங்கினத்தின் புதை படிவங்களானது, அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. இந்தப் புதை படிவப் புதிர்களுக்கு விளக்கம் கூறுவ...