பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.
அறிமுக உரை. வணக்கம் நான் விஞ்ஞானி க.பொன்முடி,நான் கடந்த பதினைந்து ஆண்டு காலமாக, நில அதிர்ச்சி சுனாமி ஏன் ஏற்படுகிறது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். எனது ஆராய்ச்சியில்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால்தான் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருப்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. ஆனால் தற்பொழுது நில அதிர்சிகள் குறித்தும் சுனாமிகள் குறித்தும் தவறான கருத்து நிலவுகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால்,கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றி இருக்கும் கடல் தளங்களுடன் தனித் தனிப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ,அவ்வாறு பாறைத் தட்டுகள் நகரும் பொழுது,அந்தப் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது. அதே போன்று,ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு,திடீரென்று நழுவிச் செல்லும் பொழுது,சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது. இந்த நிலையில்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால்தான் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருப்பது எப்படி தெரிய வந்தது என்பது குறித்து நான் சற்று விரிவாக விள...