Posts

Showing posts from March, 2018

நமது பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.

புதைப் படிவப் புதிர்களுக்கு புதிய விளக்கம். புதைப் படிவ ஆதாரங்கள் மூலம் நகரும் கண்டங்கள் கருத்து ஒரு தவறான கருத்து என்பது தெரிய வந்துள்ளது. ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதைப் படிவங்கள் மூலம் நகரும் கண்டங்கள் விளக்கமானது, ஒரு தவாறன விளக்கம் என்பது தெரிய வந்துள்ளது. தற்பொழுது, கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு, முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெருங் கண்டமாக இருந்ததாகவும்,அதன் பிறகு அந்தப் பெருங் கண்டமானது, பல சிறிய கண்டங்களாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், கூறப் படும் விளக்கமானது, தவறான விளக்கம் என்பது பல ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதே போன்று,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய வளரக் கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதைப் படிவங்களானது,காணப் புவதற்கு,முன் ஒரு காலத்தில் அந்தத் தீவானது,அதிக வெப்ப ...

ஆய்வுச் சுருக்கம்

தற்பொழுது,கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் கண்டத் தட்டுப் பாறைகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு நகரும் பொழுது,பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,ஒரு கண்டத் தட்டுப் பாறைக்கு அடியில் அடுத்த கண்டத் தட்டுப் பாறையானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்வதாலேயே சுனாமிகள் உருவாகுவதாகவும்,கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்த நிலையில்,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே, நில அதிர்ச்சிகளும், சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாகக் கடல் தரையும், கண்டங்களும், நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமிக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயரும் பாறைக் குழம்பானது,கடல் தரையையும்,கண்டங்களையும்,தொடர்ச்சியாகத் துளைப்பதால்,கடல் தரையின் மேலும்,கண்டங்களின் மேலும்,எரிமலைத் தொடர்கள் உருவாகுவதாகப் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கத்தின் படி,கடல் தரையின் மேலும்,கண்டங்களின் ம...