பூமியானது ஒரு நீர்க் கிரகமாக மாறிக் கொண்டு இருக்கிறது.
நீண்ட நாளாகவே,நில அதிர்ச்சி,சுனாமி மற்றும் கடல் மட்ட உயர்வு குறித்த எனது கண்டு பிடிப்பை ஒரே ஒரு கட்டுரையில் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.தற்பொழுதுதான் அந்த எண்ணம் நிறைவேறி இருக்கிறது. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,வணக்கத்துடன் விஞ்ஞானி க.பொன்முடி எழுதும் மடல்.நான் இணையத்தில் வெளியிடப் பட்ட தகவல்களின் அடிப்படையில்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருப்பதைக் கண்டு பிடித்தேன். எனது கண்டு பிடிப்பை உலக அளவில் கொண்டு செல்ல,ஆங்கில மொழியறிவுடன்,அறிவியலைப் புரிந்து கொள்ளக் கூடிய ,ஒருவரின் உதவியும் ஒத்துழைப்பும் தேவைப் படுகிறது.இந்தப் பணியானது உயர்ந்த நோக்கமும் சிறப்பும் உடையது. அந்த வகையில் தாங்கள் இந்த உயரியப் பணிக்குப் பொருத்தமானவர் என்று நான் நம்புவதால்,தங்களின் மேலான ஒத்துழைப்பை வேண்டுகிறேன். தங்களின் நம்பிக்கையுள்ள, விஞ்ஞானி க.பொன்முடி. ஆய்வு பற்றி... ஒரு நாள் நான் ஒரு பழைய புத்தகக் கடையில்,இருந்த பழைய நேசனல் ஜியாகிரபிக் பத்திரிக்கையை எடுத்துப் புரட்டிய பொழுது,ஒரு படம் என் கவனத்தைக் கவர்ந்...