கண்டத் தட்டு நகர்ச்சி விளக்கம் ஒரு தவறான விளக்கம் .
குழப்பத்தில் முடிந்த கண்டத் தட்டு நகர்ச்சி விளக்கம். இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆழமற்ற கடற் கரைப் பகுதியில் வாழ்ந்த,மூன்று அடி நீளமுள்ள, மெசோசாரஸ் என்று அழைக்கப் படும்,முதலை போன்ற,ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும்,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. இதன் அடிப்படையில்,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை ஆராய்ச்சியாளர்,கடற் கரையோரம் வாழ்ந்த ஒரு விலங்கால் ,நிச்சயம் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து ,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களுக்கும் இடம் பெயர்ந்து இருக்க முடியாது. எனவே இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டங்களாக இருந்திருக்க வேண்டும்,அதன் பிறகு ,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து ,தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று விளக்கம் கூறினார். ஆனால் அவரின் விளக்கத்தை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஏற்க வில்லை. மாறாக புயல் மற்றும் சூறாவளியால் ,க...