Posts

Showing posts from June, 2016

எனது ஆய்வறிக்கை.

தற்பொழுது நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் ,புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமானது தவறான விளக்கம் என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாகத் தற்பொழுது,கண்டங்கள் எல்லாம் தனித் தனியாகக் கடல் தளங்களுடன்,தனித் தனிப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். அதன் அடிப்படையில்,பாறைத் தட்டுகள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகப் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். அதே போன்று,கடலுக்கு அடியில்,பாறைத் தட்டுகள் நகர்ந்து, ஒரு பாறைத் தட்டுக்கு அடியில், அடுத்த பாறைத் தட்டானது உரசியபடி நகர்ந்து செல்லும் பொழுது,மேற்பகுதியில் இருக்கும் பாறைத் தட்டானது திடீரென்று மேல் நோக்கி உயர்ந்து மேல் பகுதியில் இருக்கும் கடல் நீரை மேல் நோக்கி தள்ளுவதால் சுனாமிகள் ஏற்படுவதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால் இந்த விளக்கங்கள் எல்லாம் அடிப்படை ஆதாரமற்ற தவறான விளக்கங்கள் என்பது,உலக அளவில் லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து வரையப் பட்ட,உலக...