துருவப் பகுதிகளில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவது ஏன் ? விளக்கம்.
ala10.jpeg http://phenomena.nationalgeographic.com/2013/05/06/dinosaurs-in-the-dark/ ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்த டைனோசர்கள்,முட்டைகளை இடுவதன் மூலம் இனப் பெருக்கம் செய்கின்றன.ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொறிவதற்கு முப்பது சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.ஆனால் கடுங் குளிர் நிலவும் அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச ரேகைப் பகுதியான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,வட அமெரிக்கக் கண்டத்தின் , வட பகுதியில் உள்ள,அலாஸ்காவின் கொல் வில்லி ஆற்றுப் பகுதியில் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இப்பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலை மைனஸ் இருபது டிகிரி.எனவே நிச்சயம் உறை பனி வெப்ப நிலையில் டைனோசர்களின் முட்டைகள் பொறிந்து இருக்க சாத்தியம் இல்லை.எனவே டைனோசர்கள் காலத்தில் ஆர்க்டிக் வளையப் பகுதியில் வெப்ப நிலை அதிகமாக இருந்திருப்பது,அலாஸ்கா பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.அதே போன்று யானைக் கூட்டத்தை விட அதிக அளவில் தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர்களின் கூட்டதிற்கு உணவளிக்கக் கூடிய அளவுக்கு,ப...