Posts

Showing posts from June, 2014

கடல்...பூமிக்குள் இருந்து வந்தது ! ஆய்வில் கண்டு பிடிப்பு.

Image
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,  வால் நட்சத்திரங்கள்  லட்சக் கணக்கில் கொத்துக் கொத்தாகப்  பூமியில் விழுந்ததாகாவும், அப்பொழுது  அதில் இருந்த நீர்  திரண்டதால்தான் கடல் உருவானதாக அறிவியல் உலகில் பரவலாக நம்பப் பட்டது. theoriginofocean4.jpg http://www.space.com/13185-comets-water-earth-oceans-source.html ஆனால் நான்,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டாக உருவாகும் பொழுது பிரிந்த நீரால்தான் கடல் உருவானது என்று புதை படிவ ஆதாரங்கள் குறித்த  ஆய்வின் அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்து இருந்தேன். அத்துடன் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கும் கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுகளில் இருந்து வெளிவரும்  நீர் தொடர்ந்து கடலில் கலந்து கொண்டு இருப்பதே காரணம் என்றும் தெரிவித்து இருந்தேன். theoriginofocean1.png http://www.keetru.com/index.php/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/299-2009-08-26-21-53-08 இந்த நிலையில் தற்பொழுது  புவியின் மேற்பரப்பில் இருப்பதைக் காட்டிலும்...