ஹைத்தி சுனாமி .மறைக்கப் பட்ட உண்மைகள்.விஞ்ஞானி.க.பொன்முடி.
ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தினர் உண்மைக்குப் புறம்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருகின்றனர். கரீபியன் பாறைத் தட்டு நகர்ந்து கொண்டு இருக்கிறதா? கரீபியன் பாறைத் தட்டு என்று அழைக்கப் படும் ஒரு பாறைத் தட்டின் மேல் அமைந்து இருப்பதாகக் கூறப் படும் ஹைத்தி தீவு உண்மையில் நகர்ந்து கொண்டு இருக்கிறதா? அல்லது எந்தத் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது? என்று யாருக்கும் தெரியவில்லை. இந்த உண்மையை மறைத்து பூசி மெழுகி அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தினர் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருகின்றனர். அறிக்கையின் முதல் வரி. The January 12, 2010, Haiti earthquake occurred in the boundary region separating the Caribbean plate and the North America plate. ‘’ஹைத்தி தீவு நில அதிர்ச்சியானது வட அமெரிக்கக் கண்டத்தட்டு எல்லைக்கும் ஹைத்தி தீவு பாறைத் தட்டு எல்லைக்கும் இடைப் பட்ட பகுதியில் நடந்தது’’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அடுத்த வரியில்தான் உண்மை மறைக்கப் படுகிறது. This plate boundary is dominated by left-lateral strike slip motion and compression, and accommodat...