Posts

Showing posts from October, 2010

நிலப் பகுதிகள் உயரும் பொழுது நில அதிர்ச்சி ஏற்படுகிறது.ஆய்வு முடிவு -விஞ்ஞானி.க.பொன்முடி.

ஒரு நாள் தற்செயலாக நான் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் வட அமெரிக்காவில் உள்ள ஒரு மலைப் பகுதியில் இருப்பது குறித்த கட்டுரை ஒன்றை நேசனல் ஜியாகிரபிக் பத்திரிக்கையில் படித்தேன். சட்டென்று எனக்கு அந்த மலையும் மலை சார்ந்த நிலப் பகுதிகளும் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பது இருப்பது புரிந்தது. ஆனால்.... இ ருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த மெசோ சாராஸ் என்று அழைக்கப் படும் ஒரு தரை வாழ் விலங்கின் எலும்புப் புதை படிவங்கள், அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டிருக்கும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் இருப்பதன் அடிப்படையில்.... நிச்சயம் நிலத்தில் வாழ்ந்த ஒரு விலங்கால் அட்லாண்டிக் கடலைக் கடந்து தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு வந்திருக்க இயலாது, எனவே இந்தக் கண்டங்கள் எல்லாம் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இணைந்து இணைந்து இருந்திருகிறது என்றும் பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்...

பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

ஆய்வுக் கட்டுரை.விஞ்ஞானி.க.பொன்முடி. டைனோசர்கள் போன்ற விலங்கினங்கள் பல கண்டங்களிலும் தீவுகளிலும் காணப்படுவதற்கு முன்னொரு காலத்தில் கண்டங்கள் தீவுகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்தன என்றும் பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்றும் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டு இருகின்றனர். இவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது அவற்றின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால் டைனோசர்கள் எலும்புகள் பல கண்டங்களில் காணப் படுவதற்கு உண்மையில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம். குறிப்பாக நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் தரையில் துளையிட்ட பொழுது, கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரைப் பாறையில் பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை நார்வே நட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருகிறது. இவ்வாறு கடல் மட்ட...