கடலுக்கு அடியில் டைனோசர் எலும்புகள்...! பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.-விஞ்ஞானி.க.பொன்முடி.
கடலுக்கு அடியில் இருந்து எண்ணெய் எடுப்பதற்காக துளையிடும் கருவிகள் மூலம் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைகளில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகின்றனர். நார்வே நாட்டைச் சேர்ந்த மார்டேன் பெர்கன் மற்றும் ஜோகன் பீட்டர் என்ற இரண்டு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நார்வே நாட்டு கடற்கரையில் இருந்து மேற்கு திசையில் நூற்றி நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 2.3 கிலோ மீட்டர் ஆழத்தில்( 1.4 மைல் ) அமைந்துள்ள கடலடிப் பாறைகளில் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைத் துண்டுகளில் மூன்று சென்ட்டி மீட்டர் நீளமுள்ள எலும்புப் புதை படிவங்கள் இருப்பதைக் கண்டனர். அந்த எலும்புப் புதை படிவங்களை சக்தி வாய்ந்த நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்த ஆஸ்லோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோர்ன் ஹரம் என்ற ஆராய்ச்சியாளர் அந்த எலும்புப் புதைபடிவங்கள் ;இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தில் பரவலாக வாழ்ந்த பிளேட்டியோ சாராஸ் என்ற வகை டைனோசரின் விரல் எலும்புகள் என்று அறிவித்து இருக்கிறார். குறிப்பாக பிளேட்டியோ சாராஸ் வகை டைனோசர்களானது முப்பது அடி நீளம் வரையிலும் வளரக் கூ...