பூமி குளிர்ந்து கொண்டிருக்கிறது.
பூமி குளிர்ந்து கொண்டிருக்கிறது - விஞ்ஞானி.க.பொன்முடி. பூமிக்கு அடியில் உள்ள அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகும் பொழுது அதிலிருந்து நீர் மற்றும் வாயுக்கள் பிரிவதால் அடர்த்தி குறைவான பாறைத் தட்டுகள் உருவாகின்றன. பாறைத் தட்டுகள் உருவாகும் பொழுது பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் சுடுநீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதால் கடல் மட்டடம் உயர்கின்றது. பூமிக்கு அடியில் புதிதாக உருவாகும் பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்வதால் கடல் தரையில் இருந்து நிலப் பகுதிகள் கடல் மட்டத்திற்கு மேலாக உயர்கின்றன. ஒரு இடத்தில் மட்டும் பாறைத் தட்டுகள் உயரும்பொழுது பாறைத் தட்டுகளின் விளிம்புகளுக்கு இடையே ஏற்படும் உரசலால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது. நில மட்டம் உயர்வதாலும் , நீர்ப்பரப்பு அதிகரித்து நீர் மட்டமும் உயர்ந்து கொண்டிருப்பதால் பூமி குளிர்ந்து கொண்டிருக்கிறது.