இரண்டு நிகழ்வுகள் மூலம் பூமி விரிவடைந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இரண்டு நிகழ்வுகள் மூலம், பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததால்தான் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.அத்துடன் கடலானது,பூமிக்குள் இருந்து வந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.அதே போன்று பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.விஞ்ஞானி.க.பொன்முடி. நிகழ்வு ஒன்று. தெற்காசிய சுனாமிக்கு, நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால், உண்மையான காரணத்தை தெரிவிக்க இயல வில்லை. ஏனென்றால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன், வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் நம்புவதை போன்று உண்மையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன், வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில்,கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு ,கடல் தளத்தின் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். இந்த நிலையில், கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான, முப்ப...