ஒரு கண்டு பிடிப்பின் கதை.full story
சுருக்கமான அறிக்கை. தற்பொழுது, கடல் பகுதியைக் கடக்க இயலாத,டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுகளிலும் கண்டங்களிலும்,காணப் படுகின்றன.இதற்கு முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணையானது இருந்ததாகவும்,அதன் பிறகு,கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனிப் பாறைத் தட்டுகளாக, நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். அவ்வாறு,கடல் தளங்கள் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். .அதே போன்று, ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத்த தட்டு, திடீரென்று நகர்ந்து செல்லும் பொழுது, அப்பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும்,புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். இந்தக் கருத்தின் படி,கடல் தளங்களுடன் தனித்த தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகாக நம்பப் படும்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா,அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமேரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தள பக...